search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுஷ் அமைச்சகம்"

    • ‘யோகா-பிரேக்’ எனும் செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
    • ஆசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய 5 நிமிட நெறிமுறை இந்த மொபைல் செயலி மூலம் கிடைக்கும்.

    புதுடெல்லி:

    யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இது உலகின் அனைத்து பகுதிகளையும் அடைந்துள்ளது.

    யோகா ஏதோ ஒரு வடிவத்தில், ஆன்மீக அல்லது ஆரோக்கிய நோக்கங்களுக்காக நன்மை பயப்பதாக உள்ளது.

    இதையடுத்து பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும், புத்துணர்ச்சியடையவும், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பணியிடத்தில் மீண்டும் கவனம் செலுத்தவும் 'யோகா-பிரேக்' எனும் செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    ஆசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய 5 நிமிட நெறிமுறை இந்த மொபைல் செயலி மூலம் கிடைக்கும்.

    எனவே இதுதொடர்பாக ஆயுஷ் அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலர்கள் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.

    இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விலக்கு அளிக்க, இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இது பணியாளர்களுக்கு பணியிடத்தில் ஆறுதல் அளிக்கும். இந்த 'யோகா-பிரேக்' செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் யோகா ஆகிய யூடியூப் சேனல்களிலும் இது தொடர்பான வீடியோக்கள் உள்ளது.

    எனவே அனைத்து துறை அரசு ஊழியர்கள் இடையே இந்த செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×